
Dala'il Al Khayrat (in Tamili) (ebook)
$0متوفر
الوصف
தலாயிலுல் ஹைராத் மனனப் போட்டி பற்றி அறிந்துகொள்ள, இங்கே கிளிக் செய்யவும்
இது நன்மைகளின் ஊற்றுக்கண்ணாகும். இதில் நபிகள் நாயகம் ﷺ அவர்களின் அகமியங்களில் ஓர் இரகசியமும் பொதிந்துள்ளது.
இதன் மிக முக்கியமான சிறப்புகள், பயன்கள் மற்றும் அகமியங்களில் ஒன்றாக, இதனைத் தொடர்ந்து ஓதிவருவது ஈமானை வலுப்படுத்துவதற்கும், அதனை அதிகரிப்பதற்கும், சரியான இஸ்லாமிய அகீதாவைக் கற்றுக்கொள்வதற்கும் காரணமாக அமைகின்றது.
மேலும், நபிகள் நாயகம் ﷺ அவர்களின் சிறப்புகள், தனித்துவங்கள் மற்றும் அற்புதங்களை மீண்டும் மீண்டும் நினைவுகூர்வதற்கும் இது காரணமாகின்றது.
இதன் மூலம் இந்நூலை ஓதுபவருக்கு நபிகள் நாயகம் ﷺ அவர்கள் மீதான அன்பும் கண்ணியமும் அதிகரித்து, அவர் இம்மையிலும் பர்ஸக் வாழ்விலும் மறுமையிலும் நபிகள் நாயகம் ﷺ அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களில் ஒருவராக ஆகின்றார்.
மேலும், இந்நூலை ஓதுவது தேவைகள் நிறைவேறுவதற்கும், கவலைகளும் மனக்கலக்கங்களும் நீங்குவதற்குமான மிகச் சிறந்த காரணங்களில் ஒன்றாகும்.
இதனைத் தொடர்ந்து ஓதிவந்த எவரும் வறுமையடைந்ததில்லை.
இதன் பரக்கத்துகளில் ஒன்றாக, இந்நூலை ஓதும் ஒவ்வொருவர் மீதும் நன்மைகள் பெருமளவில் பொழிகின்றன. தலாயிலுல் ஹைராத் ஓதப்படும் ஊரில் மழைப்பொழிவும் அதிகரிக்கின்றது.
மேலும், அல்லாஹுத்தஆலாவின் மகத்தான திருநாமத்தைக் கொண்டு கேட்கப்படும் துஆக்களும் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
அல்லாஹுத்தஆலா ஸூரத்துள் ளுஹாவை,
وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ
“உமது இரட்சகனின் அருட்கொடையைப் பற்றி எடுத்துரைப்பீராக!”
என்ற திருவசனத்துடன் நிறைவு செய்துள்ளான்.
அதேபோன்று ஸூரத்துஷ் ஷர்ஹை,
أَلَمْ نَشْرَحْ لَكَ صَدْرَكَ
“உமக்காக உமது நெஞ்சத்தை நாம் விரிவாக்கவில்லையா?”
என்ற திருவசனத்துடன் ஆரம்பித்துள்ளான்.
இது, ஒருவர் தனக்கோ அல்லது பிறருக்கோ அல்லாஹ்வின் அருட்கொடைகளைப் பற்றி எடுத்துரைத்தால், அல்லாஹுத்தஆலா அவரது நெஞ்சத்தை விரிவாக்கி, அவரது சுமையை நீக்கி, அவரது புகழை உயர்த்தி, அவரது கஷ்டத்தை இலகுவாக்குகின்றான் என்பதை உணர்த்துவது போன்று அமைந்துள்ளது.
அல்லாஹ்வின் தூதர் ﷺ அவர்களாகிய அருட்கொடையைவிட மகத்தான அருட்கொடை வேறெதுவாக இருக்க முடியும்?
அப்படியானால், எங்கள் தலைவர் முஹம்மத் ﷺ அவர்களின் சிறப்புகள், திருவுருவச் சிறப்புகள், உயர்ந்த நற்குணங்கள் மற்றும் அற்புதங்களை நினைவுகூர்ந்து எடுத்துரைப்பதுடன், அவர்கள் மீது அதிகமதிகம் ஸலவாத்து ஓதுபவரின் நிலை எத்துணை மகத்தானதாக இருக்கும்!
آراء القراء
مراجعات المنتج
لا توجد مراجعات بعد.
كن أول من يراجعDala'il Al Khayrat (in Tamili) (ebook)
منتجات قريبة



